/ கவிதைகள் / மரபுத் தமிழ்மாலை

₹ 150

யாப்பிலக்கணம் சிதையாமல் வெண்பா, எண்சீர் விருத்தம், அறுசீர் கழிநெடிலடி, ஆசிரிய விருத்த பாக்களால் உருவாக்கப்பட்டுள்ள நுால். நுாறு வெண்பாக்களால் அமைந்த விண்ணப்ப வெண்பா மாலையும், தமிழ் தாயைப் போற்றும் 21 விருத்த பாக்களும், வேட்கை பதிகமும் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. முருகனின் அறுபடை திருத்தலங்களோடு வயலுார், மருதமலை, விராலிமலை போன்ற திருத்தலங்களும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. நாடு செழிக்க மழை வேண்டியும், பாரதி கண்ட பாரதம், வான் புகழ் வள்ளுவம் பற்றிய பாடல்களும் உள்ளன. எதுகை, மோனைகளோடு சொற்கட்டும் சந்தங்களும் நிறைந்து மரபுக் கவிதை எழுத விரும்புவோருக்கு உதவும் நுால். -– புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ