/ கதைகள் / மருமகள்... நான் மகளானேன்!
மருமகள்... நான் மகளானேன்!
கவிதையுடன் உள்ள சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒவ்வொன்றும் இரண்டு, மூன்று பக்க அளவில் அமைந்திருக்கிறது.தலைப்பை சொல்லும் ஒரு கதை. மாமியார் தான் சம்பந்தி. அம்மாவிடம் காட்டிய நாகரிக பண்பு, மருமகளாய் போனவரை மகளாக மாற்றுகிறது. நல்ல குணம் எங்கிருந்தாலும் வாழத்தானே செய்யும்.முழுக்க முழுக்க நகைச்சுவையாக உள்ளது, ‘நீலா ராமுவின் நிலா’ என்ற கதை. ஆபீசுக்கு வரப்போகும் புது மேனேஜர் சக ஊழியர்களை எடை போடுவது நல்ல மாதிரியாக தரப்பட்டுள்ளது. கதைகளுக்கு இடையில் வர்ணனைகள் அலாதியாக உள்ளன.எந்த ‘டிவி’ சேனலில் எத்தனை மணிக்கு, என்ன நாடகம், எப்போது விளம்பர இடைவெளி வரும் என மனதிலே பதிய வைத்து விடும் கதையும் உள்ளது.– சீத்தலைச் சாத்தன்