/ கட்டுரைகள் / மறுப்பது எப்படி!
மறுப்பது எப்படி!
இக்கட்டான சூழல்களை சமாளிப்பதற்கு வழிகாட்டும் நுால். முக்கியத்துவமற்ற செயல்களை செய்ய கட்டாயப்படுத்தும் போது, அவற்றை தவிர்க்கும் மனநிலையை பெறுவதற்கு பயிற்சி களம் போல் அமைந்துள்ளது. ‘மறுக்க முடியுமா’ என துவங்கி, ‘மறுப்பது எப்படி!’ வரை, 21 தலைப்புகளில் உள்ளது. கருத்துகள் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டுள்ளன. சமூக நிர்ப்பந்தத்துக்கு பணியாமல், இயல்பாக வாழும் முறையை சொல்கிறது. உளவியல் ரீதியாக தக்க விடை சொல்லப்பட்டுள்ளது. அன்றாடம் திணிக்கப்படும் செயல்களில் இருந்து தப்புவதற்கு தக்க வழிமுறை சொல்லும் நுால்.– ஒளி