/ வாழ்க்கை வரலாறு / மருது பாண்டியர்கள்
மருது பாண்டியர்கள்
சிவகங்கை சீமையை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவிக்க போராடிய மருது பாண்டியர்களின் வாழ்க்கை, செயல்பாடு, வீரத்தை சுருக்கமாக சொல்லும் நுால். மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரின் கப்பம் கட்டும் ஆணைக்கு இணக்கம் தெரிவித்த போது, அவரது மனைவி வேலு நாச்சியார் உடன்படவில்லை. எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதை விட, எப்படி வாழ்ந்தோம் என்பதே பெருமை என முழங்கியவருக்கு மருது பாண்டியர்கள் உறுதுணையாக நின்றனர். அவர்களின் தியாகத்தை கோர்வையாக சொல்லியுள்ள நுால்.– சீத்தலைச் சாத்தன்