/ வாழ்க்கை வரலாறு / மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்
மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்
செட்டிநாட்டு பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நுால். தியாகம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, குடும்பம் நடத்தும் விதம் பற்றி விரிவாக அலசப்பட்டுள்ளது. குடும்ப வாழ்வில் துன்பம் வந்தாலும், பிள்ளைகளுக்கு தெரியாமல் மறைத்து வாழ்ந்ததை கூறுகிறது. முதுமையில் சுயமாக பணி செய்ய முடியாத காலத்திலும் உதவும் எண்ணம் இருந்ததை காட்டுகிறது. தாயை இழந்த சிறுமி, சித்தியை நேசிப்பது ரசிக்கும்படி உள்ளது. தேவானை, திருநிலை, ஒப்பிலாள், உண்ணா, ஒமையா என பெண்களின் வாழ்வு யதார்த்தத்தை விவரிக்கும் நுால். – முகில்குமரன்