/ புத்தக மதிப்புரை / மாயச் சொப்பனங்கள்

₹ 150

சமூக பார்வை உடைய கவிதைகளை உள்ளடக்கிய நுால். அவலங்களைச் சுட்டிக்காட்டி கேள்விக் கணைகளுடன் உரத்துக்குரல் எழுப்புகிறது. மக்களாட்சிக்கு பொருந்தாத நடைமுறைகளையும், அடக்குமுறைகளையும் கடுமையாக விமர்சிக்கிறது. லஞ்சம், ஊழலை எதிர்க்கிறது. சமூக முரண்களை படம்பிடித்துக் காட்டி கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது. சமூக பேதங்களால் அநீதி இழைக்கும் அதிகார வர்க்கத்தை வன்மையாகச் சாடுகிறது. ஜாதி பேதம், பெண்ணாசை, பேராசையை கண்டிக்கிறது. உணர்ச்சிவசமான சொல்லாடல்களால் திரும்பிப் பார்க்க வைக்க முயற்சிக்கிறது. இளம்பெண்ணின் குமுறலை காட்சியாக்கி நெகிழ்ச்சியுறச் செய்கிறது. கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் அமைக்கப்பட்டுள்ளன. நெடிய கவிதை நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை