/ மருத்துவம் / மழலையின் வளர்ப்பில் மரபும் சூழலும்
மழலையின் வளர்ப்பில் மரபும் சூழலும்
மன அழுத்தமின்றி குழந்தைகளை வளர்க்க தக்க ஆலோசனைகளை தரும் நுால். குழந்தை மருத்துவ நிபுணரின் அனுபவத்தின் சாரமாக மலர்ந்துள்ளது.இந்த புத்தகம், பண்புகளும் திறமைகளும், குழந்தையின் சூழல் உலகம், பெற்றோர் பலவிதம் என்ற பெருந்தலைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. குழந்தை மருத்துவ சிகிச்சை அடிப்படையில் பெற்ற அனுபவங்களின் சாரமாக உள்ளது.மிகுந்த பொறுப்புணர்வுடன் கருத்துகள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழந்தையும் சூழலுக்கு ஏற்ப எப்படி இயங்குகிறது என்ற அடிப்படையை புரிய வைக்கிறது. குழந்தை வளர்ப்பில் நல்ல ஆலோசனை தரும் வகையிலான நுால்.– மதி