/ வாழ்க்கை வரலாறு / தேசம் நேசித்த தலைவன்- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
தேசம் நேசித்த தலைவன்- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் முக்கிய தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கும் நுால். அவர் மேற்கொண்ட தியாகங்களையும் அறியத் தருகிறது. நேதாஜியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை சரித்திர ஆதாரங்களுடன் விவரிக்கிறது; சுயசரிதை போல அமைகிறது. ஆய்வுகள் அடிப்படையில் நேதாஜியின் நம்பிக்கைகள், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. எளிதாக புரியும் விதத்தில் இருக்கின்றன. விடுதலைக்கு அர்ப்பணித்த நேதாஜி வீர வரலாற்றை புரிந்துகொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டியாக இருக்கும். தேசிய உணர்வை ஊட்டும் நுால்.–- இளங்கோவன்