/ கட்டுரைகள் / எம்.ஜி.ஆர். 100

₹ 25

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பற்றி நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியாகி இருந்தாலும், இந்த புத்தகம் வித்தியாசமானது. எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவரைப் பற்றிய தகவல்கள் என 100 பக்க கட்டுரைகள் நுாலில் இடம்பெற்றுள்ளன. 100 கட்டுரைகளுக்கும் எம்.ஜி.ஆர்., நடித்த திரைப்படங்களின் தலைப்பை வைத்து புதுமை காட்டியிருக்கிறார், எழுத்தாளரும், நாடறிந்த தமிழ்ப் புலவருமான நல்லாசிரியர் வை.சங்கரலிங்கனார். பக்கந்தோறும் ‘பளீச்’ படங்களும் பொருத்தமாக இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.எம்.ஜி.ஆர்., வாழ்க்கையை இளைய தலைமுறையினர் எளிதாக புரிந்து கொள்ள, இதை விட எளிமையாக ஒரு நுாலில் தர இயலாது. கூடுதலாக எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கும் அருமையான விருந்தாக இந்த நுாலை படைத்திருக்கிறார் நுாலாசிரியர்.– ஜி.வி.ஆர்.,


முக்கிய வீடியோ