/ கட்டுரைகள் / மோடி @20 நனவாகும் கனவுகள்
மோடி @20 நனவாகும் கனவுகள்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை பற்றி, பல துறை வல்லுனர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இன்றைய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை அளிப்பதாக எழுதியுள்ளார். அவரது சாதனைகளால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஒரு விஷயத்தை முயன்று முடிக்கும் விடாமுயற்சி உடையவர் மோடி எனக் குறிப்பிட்டுள்ளார் அமீஷ் திரிபாதி. ஆட்சிக்கால வளர்ச்சி பற்றி அமித் ஷா பதிவு செய்துள்ளார்.பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்போரை சமாளித்து, உலக நாடுகளை இந்தியா பக்கம் திருப்பும் அணுகுமுறை சிறப்பாக இருப்பதாக பலரும் பதிவிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் ஆளுமையை கூறும் நுால்.– முகில் குமரன்