/ கதைகள் / மொய்தீனுக்கு வாழ்வளித்த சென்னை பட்டிணம்!
மொய்தீனுக்கு வாழ்வளித்த சென்னை பட்டிணம்!
பழைய சென்னையை காட்சிப்படுத்தும் நாவல். கற்பனை பாத்திரத்தால் கதையை சொல்கிறது. சென்னை சிந்தாதரிப்பேட்டை என்பது சின்னதறிப் பேட்டையைக் குறிப்பிடுகிறது. அந்தக் காலத்தில் அங்கே நெசவுத் தொழில் நடந்தது குறித்து கூறுகிறது. ஆங்கிலேயர் நகரத்தை விலைக்கு வாங்கியதாக தெரிவிக்கிறது. விடுதலைக்குப் பின் சென்னை என பெயர் பெற்றதைக் குறிப்பிடுகிறது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிலவிய பஞ்சம் பற்றியும், மதராஸ் பட்டணம் வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது. கேரளா மொய்தீன் என்ற கதாபாத்திரம் டீக்கடையில் வேலை செய்து, ஒரு பல்பொருள் அங்காடிக்கு முதலாளியாவதை முடிவாகச் சொல்கிறது கதை. – முகிலை ராசபாண்டியன்