/ பொது / மூங்கில் மூச்சு

₹ 95

757, அண்ணா சாலை, சென்னை - 600 002 (போன்:044 - 2852 4074) (பக்கம் 222) தமிழ் சமூகத்தில் நடந்த பல்வேறு கலாச்சார மாற்றங்களை, நெல்லை தமிழ் மணக்க சுவையோடு பதிவு செய்திருக்கிறார் சுகா. "மூங்கில் மூச்சை ஒரே மூச்சில் சுவாசித்து(வாசித்து) முடித்தால், தாமிரபரணி கரையோரம் பொதிகை தென்றல் தவழ நடந்த சுகம். திருநெல்வேலி ரதவீதிகளில் வலம் வந்த மகா அனுபவம். "அதெப்படிய்யா மறக்க முடியும்? வெங்கட்டோட ஒன்றரை வருஷத்து மலச்சிக்கல அப்பர் கபேயுட ஒத்த தம்ளர் காபி தீத்துட்டுல்லா? என்பது போன்ற யதார்த்த நகைச்சுவை பேச்சுக்கள், மகிழ்ச்சி கிண்டல்கள், "ஜாலி கேலிகள் புத்தகம் எங்கும் மண்ணின் மணம் பரப்புகிறது. ஒரு திருநெல்வேலி காரரின் அனுபவ பகிர்வுகள் என்று மட்டும் இந்த புத்தகத்தை எண்ண இடமில்லை. நாம் வாழ்ந்த, அனுபவித்து முடித்து மறந்து போன கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் திருநெல்வேலி மக்களையும், மொழியையும் ஊடகமாக வைத்து விளக்கியுள்ளார் ஆசிரியர். மனதில் பதிந்து கிடக்கும் நினைவுகளை அசை போடும் ஆசிரியரின் ஆசையே இம்முயற்சி. இதில் அவர் வென்றிருக்கிறார். நம்மையும் ஈர்க்கிறார்.


புதிய வீடியோ