/ இசை / சென்சாரில் சிக்கிய சினிமாப் பாடல்கள்! தொகுதி – 1
சென்சாரில் சிக்கிய சினிமாப் பாடல்கள்! தொகுதி – 1
ஆங்கிலேயர் காலம் முதல் அதிகாரத்தில் இருப்போருக்கும், சினிமா பாடல்களுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் நுால். தணிக்கையான பாடல் வரிகளை சுவாரசியமாக தருகிறது. அது போன்ற பாடலை எழுதியவர், எந்தப் படத்தில் இடம் பெற்றது, யார் நடித்தது போன்ற தகவல்களுடன் உள்ளது. தமிழில் பிரபலமான கனவுகளே ஆயிரம் கனவுகளே, நான் ஆணையிட்டால், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, என் கேள்விக்கென்ன பதில், யாரடி நீ மோகினி, தொட்டால் பூ மலரும், அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன், எனக்கொரு மகன் பிறப்பான் என துவங்கும் பிரபல பாடல்கள் பற்றி பேசுகிறது. திரைப்படத்துறையில் பாடல் தணிக்கை பற்றிய நுால்.– பெருந்துறையான்