/ இலக்கியம் / முகம் மலர அகம் குளிர
முகம் மலர அகம் குளிர
பக்கம்: 194 இலக்கிய திருவாசகம் என்ற தலைப்பில் துவங்கி, ஆனந்தமும் அதிசயமும் என, 28 கட்டுரைகளாக மலர்ந்துள்ளது. நூலாசிரியர் முன்னாள் துணை ஆட்சியராக தமிழக அரசில் பணியாற்றிய பெருமகனார். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.தித்திக்கும் திருவாசகத்தில் உள்ள பல பாடல்களை எடுத்து, ஆய்வு செய்து, அறிவியல் நோக்கோடு ஒப்பு நோக்கி, பிற இலக்கியங்கள், திருமுறைகள், மேலைநாட்டு கவிதைகள், என ஒப்பு நோக்கி, 28 தலைப்புகளில் ஒப்பிட்டு, இலக்கியமாய், அற்புதமாய் தந்துள்ளார். திருவாசகத் தேனாகத் தெவிட்டாது, அருளமுதமாய் பருகிட வேண்டுமெனில் இந்நூலை வாங்கிப் படியுங்கள்.