/ சுய முன்னேற்றம் / முன்னேற்றத்திற்கான மூலதனங்கள்
முன்னேற்றத்திற்கான மூலதனங்கள்
சுய முயற்சியால் உயர்ந்த சாதனையாளர்களின் அனுபவத் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். வெகு சாதாரண நிலையில் இருந்தோர், ஆர்வத்தோடு உழைத்து உயர்ந்த நிலைக்கு சென்றதை பல்வேறு உதாரணங்கள் வழியாக நிறுவுகிறது. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஹெரால்ட் ராபின்சன், துவக்கத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியதை எடுத்துக் கூறி நல்லுணர்வு ஊட்டுகிறது.சுயக் கட்டுப்பாடும், ஒழுக்கமுமே முன்னேற்றத்துக்கு அடித்தளம் என்கிறது. சாதிக்கத் துடிப்போருக்கு போதனை புகட்டும் அற்புத நுால்.– டாக்டர் கார்முகிலோன்