/ கவிதைகள் / முன்னுதாரண நாயகர்களாய் வாழ்வோம்!
முன்னுதாரண நாயகர்களாய் வாழ்வோம்!
தத்தம் துறையில் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்ற விருப்பம் கவிதையாக மலர்ந்துள்ளது. சுயேச்சையாக தொடர்ந்து ஜெயிக்கும் எம்.எல்.ஏ.,வின் சமூகத் தாக்கத்தை அழகாகச் சொல்லுகிறார். அவர் குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால் நல்லது தான். பணம் புழங்க வாய்ப்பில்லாத ஒரே தொகுதிக்கு உரியவரை இப்படிச் சொல்லுகிறார்.‘உன் தொகுதிக்கு என ஒதுக்கப்பட்ட நிதி, உன் தொகுதிக்கு மட்டுமே செலவாவது உன் தொகுதியில் மட்டும் தான்’ என அழகாக வடித்துள்ளார். அழகிய கவிதைகளின் தொகுப்பு நுால்.– சீத்தலைச் சாத்தன்