/ கட்டுரைகள் / முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வின் பயன்மிகு அறிவுரைகள்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வின் பயன்மிகு அறிவுரைகள்
வாழ்க்கைக்கு அறிவுரைகள் தரும் நுால். மணமக்களுக்கு நல்வழி காட்டப்பட்டுள்ளது. தமிழ் திருமண முறை குறித்த சுவாரசிய தகவல்கள் உள்ளன. குறிப்பாக, 16 பேறுகளைப் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. சீர்திருத்த திருமணம் செய்யும் மணமக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதும் கூறப்பட்டுள்ளது.இல்லறம் என்பது வழுக்கும் வரப்பு போன்றது எனக் கூறும் வள்ளுவரின் திருக்குறளை சுட்டிக்காட்டி விளக்கம் கூறப்பட்டுள்ளது. மணமக்களுக்குள் சகிப்புத்தன்மை மிக முக்கியமாக இருக்க வேண்டும் என்கிறது. அறம் செய்ய வேண்டிய அவசியம், குழந்தை வளர்ப்பு போன்ற தகவல்கள் கவனிக்க வேண்டியவை. இல்லறத்துக்கு உதவும் நுால்.– முகில் குமரன்