/ கட்டுரைகள் / முதியோர் நலன்

₹ 60

முதிய பருவத்தில் உடல்நலம் காக்கும் வழிமுறைகளை தெரிவிக்கும் நுால். பலதுறை வல்லுனர்களின் கருத்துகள் கட்டுரைகளாக தொகுத்து தரப்பட்டுள்ளன.முதுமையை வெல்லும் வழிமுறையை சொல்கிறது. மொத்தம், 22 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. முதியோருக்கு உடல், மன ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி தீர்வுக்கு வழிமுறைகளை உரைக்கிறது. உண்ண வேண்டிய உணவுக் குறிப்பு அட்டவணையாக தரப்பட்டுள்ளது. வயோதிகத்தில் சுறுசுறுப்பாக இயங்க உரிய வழிமுறைகளை சொல்கிறது. அறுபது வயதுக்கு மேல் வாழ்வை கொண்டாட நம்பிக்கையூட்டுகிறது. உடலை உறுதி செய்வதற்கு எளிய உடற்பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. முதிர்ந்த வயதிலும் சுறுசுறுப்பாக மேன்மையுடன் வாழ வழிகாட்டும் நம்பிக்கை நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை