/ வரலாறு / முத்தரையர் கல்வெட்டுக்கள்
முத்தரையர் கல்வெட்டுக்கள்
முத்தரையர்களின் வீரம், விவேகம், ஆன்மிகம், அரசாட்சி சிறப்பை பறைசாற்றும் கல்வெட்டு செய்திகளின் தொகுப்பு நுால். முற்கால சோழர் தலைநகரம், முத்தரையர் நாடு, முத்தரையர் கொடி, அரசனின் கடமையை நன்கு உணர்ந்த முத்தரையர்கள் உட்பட 27 தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன. தாய், தந்தையருக்கு கோவில் அமைத்து வழிபட்டதற்கு சான்றாக அமைந்த கல்வெட்டு தகவல் வியப்பூட்டுகிறது. முத்தரையர் காலத்து திருத்தலங்கள், நீர் மேலாண்மை, ஆன்மிக செயல்பாடுகள் தக்க சான்றுகளுடன் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிடைக்கும் முத்தரையர் சம்பந்தப்பட்ட கல்வெட்டுகளை படியெடுத்து செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. வரலாற்றை துலக்கும் அரிய நுால். – ராம்




