/ இசை, இயல், நாடகம் / முத்தொள்ளாயிரம்

₹ 310

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீதான பாடல்களுக்கு எளிமையாக உரை தந்துள்ள நுால். ஒவ்வொரு பாடலின் பின்னணியில் அமைந்த செய்திகளும் தனித்தனியாக சுவைபட கூறப்பட்டுள்ளன. இனிய பாடல்களை கொண்ட பழந்தமிழ் நுால் முத்தொள்ளாயிரம். இது மூவேந்தர்கள் மீது பாடப்பட்டது. தமிழகத்தின் பழங்காலத்தில் இருந்த வளம், சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அறச் செயல்பாடுகள், பண்பு நலன்கள், பழக்க வழக்கங்களை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பாடல்களுக்கும் தனித்தனியாக உரை தரப்பட்டுள்ளது. பின்னணி செய்திகளுடன் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. முத்தொள்ளாயிரம் பாடல்கள் சாதாரண வாசகருக்கும் புரியும் வகையில் பொருள் பிரித்து தரப்பட்டுள்ளன. பழந்தமிழ் பாடல்களை எளிமையாக புரிய வைக்கும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை