/ மாணவருக்காக / முட்டை மிட்டாய்
முட்டை மிட்டாய்
துவக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ -– மாணவியர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 16 கதைகள் உள்ளன. ‘திருவிழா’ கதை, சிறுவயது நினைவுகளை துாண்டி விடுகிறது. உயிரினங்களை நேசிக்க வேண்டியதன் அவசியத்தை, ‘பறவைக்கூடு’ கதை எடுத்துரைக்கிறது. நட்பின் தனித்துவம், அதன் அவசியத்தை, ‘நட்பு’ கதை கூறுகிறது. குடிநீரின் இன்றியமையாமையை, ‘வறண்ட பூமி’ கதை விவரித்து சொல்கிறது. எதார்த்த வாழ்வை எதிர்கொள்வது குறித்து, ‘தந்திரம் பழகு’ கதை புரிய வைக்கிறது. முன்னோர் கால வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க, ‘பாட்டி வைத்தியம்’ கதை வலியுறுத்துகிறது. கதைகள், சிறுவர்களின் தனித்தன்மையை படம் பிடித்து காட்டுகின்றன. உயிரினங்களையும், இயற்கையையும் நேசிக்க கூறும் நுால். – டி.எஸ்.ராயன்




