/ வாழ்க்கை வரலாறு / என் சுய சரிதை
என் சுய சரிதை
விதவைகள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்திய ஆர்.எஸ்.சுபலஷ்மியின் சுயசரிதை நுால். பெண் கல்விக்கு பள்ளி, விடுதிகள் உருவாக்கியதுடன் அவற்றை சிறப்பாக பராமரித்த செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. சமூகத்தில் தடைகளை தாண்டி, குடும்ப உதவியுடன் முன்னேறிய சூழல் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கல்வி உயர்வு பெற அமைப்புகள் நிறுவியது குறித்த விபரங்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளன. இந்திய மாதர் சங்கம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டது எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் கவுரவமாக வாழ அர்ப்பணிப்புடன் செயல்பட்டது பாடமாக உள்ளது. தமிழகத்தில் 19ம் நுாற்றாண்டு நடைமுறை தெளிவாக பதிவாகியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்தை கூறும் சுயசரிதை நுால். – ஒளி




