/ கட்டுரைகள் / நாடகமே உலகம்
நாடகமே உலகம்
நாடகக் கலையின் தந்தை அவ்வை டி.கே.சண்முகம் எழுதிய கட்டுரைகளும், ஆற்றிய சொற்பொழிவுகளும், நாடக அனுபவங்களையும் பற்றிய நுால். நாடகக் கலை, அனுபவ நினைவுகள், பரிதாபத்துக்குரிய பலாத்காரம், கப்பலோட்டிய தமிழன், நாடகத்தில் நகைச்சுவை உள்ளிட்ட தலைப்புகளில் கலையனுபவங்கள் சொல்லப்பட்டுள்ளன. முன்பு ஆட்டமும் பாட்டும் நாடகமாயிருந்தது. பின் வசனம் சேர்ந்ததை குறிப்பிடுகிறது. சங்கரதாஸ் சுவாமிகள் ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாத நடிகர்களை பிரம்பால் அடித்து திருத்தியதை குறிப்பிடுகிறது. ஒரே நாள் இரவில் முழு நாடகமும் எழுதி முடித்ததையும் அறியத்தருகிறது. பாரதி மணிமண்டப விழாவில் ஜெய பேரிகை கொட்டிப் பாடியதும் அரிய நிகழ்வுகளின் பதிவுகள். அவ்வை சண்முகத்தின் நாடக உலகச் சாதனைகள் பற்றிய நுால். – முனைவர் மா.கி.ரமணன்




