/ கதைகள் / நாளைய பொழுதும் உன்னோடுதான்!
நாளைய பொழுதும் உன்னோடுதான்!
இதயத்தை கவரும் 24 சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதலி மீது காதலன் அளவு கடந்த அன்பை ஆகாயம் போல் வைத்திருந்தான் என்பது போன்ற வர்ணிப்புகள் நிறைந்துள்ளன. அலைபேசி கருவியின் ஆதிக்கத்தை ஒரு கதை செம்மையுடன் சொல்கிறது. தாய்மையின் சிறப்பை மையக்கருத்தாக உடைய கதை துாய்மையாகச் சொல்கிறது. சில கதைகள், கண்ணெதிரே நடக்கிற அவலங்களின் அணிவகுப்பை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளன. சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வந்த பின், கூத்துக்கலை எப்படி நலிந்து போனது என அருமையாக சொல்லும் கதையும் உள்ளது. குடியின் கொடுமையை சவுக்கால் அடிக்கிறது மற்றொரு கதை. கச்சிதமான வரிகளில் கவனமாக கருத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்




