/ ஆன்மிகம் / நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம்
நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம்
‘நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்?’ அது தேவலோகமோ, பூலோகமோ... மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத் தொண்டு செய்த பிரம்ம தேவனின் புதல்வர் நாரதர் பற்றிய முழுமையான தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. நாரதரின் பெருமைகள், தவ வலிமை, மானிடப்பிறப்பு, மறுபிறப்பு, தேவலோக வரவேற்பு, திரிலோக சஞ்சாரி, அகங்கார நாரதர்... என மாண்புகள் சொல்லப்பட்டு உள்ளன. நாரதரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கலகங்களும் அவற்றின் பயன்களும் குறித்து மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ள நுால்.– எம்.எம்.ஜெ.,