/ யோகா / நல்லன எல்லாம் தரும்
நல்லன எல்லாம் தரும்
சிந்தனாலயா பதிப்பகம், 1/356, ராஜாத்தி கலைஞர் நகர், மண்ணிவாக்கம், சென்னை-48. (பக்கம்: 128) குண்டலினி யோகம் என்பது அறநெறி அறிவில் உயர்வதற்கான சாதனைப் பயிற்சியாகும். எல்லாராலும் எளிதாக பயில இயலாத அளவிற்கு மிகக் கடுமையாக இருந்த இந்த கலையை எளிமைப்படுத்தியவர் வேதாத்திரி மகரிஷி.அவரிடம் இந்த கலையை பயின்ற இந்நூல் ஆசிரியர், அந்த குண்டலினி யோகத்தை மந்திரம், பிரணாயாமம், தியானம், காந்த சக்தி, உடற்பயிற்சி ஆகியவை மூலம் எப்படி அடைவது என்பதை மிக விரிவாக விளக்கியிருக்கிறார்."தியரி என்ற அளவில் இந்நூலை படித்த குண்டலினியை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாமே தவிர, பயிற்சி செய்வது என்றால் இந்நூலின் ஆசிரியரை அணுகி பயனில்லை. குருவை தேடி அலைந்து கண்டுபிடித்த பின் தான் பயிற்சியை துவக்க வேண்டும்.