/ கட்டுரைகள் / நல்வழி

₹ 100

குடும்பத்திலும், சமூகத்திலும் உரசலைத் தவிர்த்து வாழும் உத்திகளை எடுத்துக் கூறும் நுால். நல்ல பழக்க வழக்கங்களை, மூடநம்பிக்கை என தவிர்த்து விடுகிறோம். அவற்றை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக் கூறுகிறது. தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது. உலகில் வளர்ந்த நாடுகள், பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் தனித்துவத்துடன் செயல்படுவதை காட்டுகிறது.இல்லற இன்பம், குலதெய்வ வழிபாடு, நித்யகர்மா, முன்னோர் ஆசி, தர்மம், பாவங்கள் வராமல் இருக்க, திருமணத்தின் முக்கியத்துவம், உணவும் உபவாசமும், முதியோரை அவசியம் கவனிக்கவும் போன்ற தலைப்புகளில் தெளிவாக செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. நல்வழியில் நலமாக வாழ்வதற்கு வழிகாட்டும் நுால். – ஒளி


முக்கிய வீடியோ