/ கட்டுரைகள் / நல்வாழ்வை நோக்கி... எழு... சிந்தி... நட...!

₹ 150

இளைஞர்களுக்காக, 21 பொருள்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிந்தனை, ஒழுக்கம், சொல், செயலில் மிளிர வேண்டும் என்கிறது. நாகரிகம்,- பண்பாடு, பழக்க வழக்கத்துக்கு நுட்பமான வேறுபாடு சுட்டப்பட்டுள்ளது. நாட்டின் தேவையை நிறைவு செய்வது தான் கல்வி என்று சொன்னாலும், தகுதி பெறவும், நல்ல சமூக உறவை வளர்க்கவுமான அடிப்படையை கொடுப்பதே கல்வியின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்கிறது. பெண் கல்வியை போற்றும் கட்டுரையும், காந்திஜி பற்றி விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறிய கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. அறிவியல், கணினி, தகவல் தொடர்பு, செய்தி தொழில்நுட்பம் போன்ற துறைகளின் வளர்ச்சி பற்றிய நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை