/ இசை / நமக்குள் நாகேஷ்
நமக்குள் நாகேஷ்
திரையில் தோன்றியதும், அரங்கத்தை சிரிப்பலையால் அதிர வைத்த பெருமை மிக்க நடிகரை பற்றிய நுால். வில்லாய் வளைந்து அதே வேகத்தில் நிமிர்வார்; தரையில் தவழ்ந்து அந்தரத்தில் உயர்வார். இன்னும் பல வித்தைகள் செய்வது நடிகர் நாகேஷுக்கு மட்டுமே வரும் அற்புதக்கலை. இவர் நடித்த 60 படங்களை தேர்ந்தெடுத்து நகைச்சுவை விளையாட்டு தொகுக்கப்பட்டுள்ளது. காட்சிகளை வசனத்துடன் கோடிட்டு காட்டியிருப்பது,பழைய ரசிகர்களை, ‘டென்ட்’ கொட்டகைக்குள் அழைத்துச் செல்கிறது. இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கும், அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பதை அடித்துச் சொல்கிறது. ஒரே மூச்சில் படித்து உணர்வை துாண்டும் நுால்.– தி.செல்லப்பா