/ சுய முன்னேற்றம் / நம்பிக்கை மகுடம்
நம்பிக்கை மகுடம்
சோதனைகளை கடந்து வெற்றி பாதையில் பயணித்தவர்களை முன்னுதாரணமாக காட்டி விளக்கும் நுால். விவேகானந்தர், ஹெலன் கெல்லர், ஆபிரகாம் லிங்கன், தாமஸ் ஆல்வா எடிசன் கடந்து வந்த பாதை, அவர்கள் கூறும் நம்பிக்கை மேற்கோள்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புகளை வரப்பிரசாதமாக ஏற்று நடந்து கொள்ள வலியுறுத்துகிறது. துணிவை அணிகலனாக அணிந்து கொள்ளச் சொல்கிறது. வரலாற்றை படித்தால் உத்வேகம் கிடைக்கும் என்கிறது. எந்த பணியிலும் புதிய வழிமுறைகளை கையாண்டு, தனக்கான முத்திரையை பதிப்பது அவசியம் என்கிறது. மாற்றம் எப்போது வேண்டுமென்றாலும் வரும் என்ற விடாமுயற்சி தேவை என சொல்கிறது. அறிஞர்கள், தலைவர்களின் கருத்துகளை முன்வைத்து நம்பிக்கை ஊட்டும் நுால். – டி.எஸ்.ராயன்




