/ இசை / நம்பிக்கை விண்மீன்

₹ 100

யாப்பிலக்கண புரிதலோடு வெண்பாவின் வகைகள், ஆசிரியப்பா, கட்டளை கலித்துறை, அம்மானை போன்ற பா வகைகளில் அமைந்த பாடல்களின் தொகுப்பு நுால். ‘சிந்தையிலே புது எண்ணம் இருந்தாலே போதும் சிறகுகளும் முளைத்திடுமே புது வானின் ஓரம்’ என்றும், ‘ஊக்குவிக்க ஆளிருந்தால் உச்சமும் எட்டிடலாம்’ போன்ற தன்னம்பிக்கையூட்டும் வரிகளும் நிறைந்துள்ளன.‘இரவா நிலையே இனிமை’ என வறுமையிலும் செம்மையுறு வாழ்க்கையை விளக்கும் பாடல்கள் உள்ளன. பெண்மையைப் போற்றியும், தமிழர் நலம் போற்றும் பாடல்களும், சுற்றுச்சூழலின் துாய்மையை வலியுறுத்தும் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. கல்வி, நட்பு, உறவு, பண்புடைமை, சான்றாண்மை, ஒப்புரவு, ஈகை போன்ற வாழ்வை செம்மையாக்கும் மரபுக் கவிதைகளின் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை