/ புத்தக மதிப்புரை / நம்ம சொல்லி யார் கேட்பாங்க?
நம்ம சொல்லி யார் கேட்பாங்க?
யதார்த்த வாழ்வை நகைச்சுவையுடன் விவரிக்கும் நுால். அனுபவமே வாழ்க்கை என்கிறது. மருத்துவமனையில் தொடங்கி, மொபைல் போன் எண் வரை, 40 தலைப்புகளில் சிந்தனையைத் துாண்டும் கருத்துக்களுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன. வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு துறை பற்றி விளக்கம் தருகிறது. மருத்துவமனை அனுபவங்களை இயல்பாக விளக்குகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை வலியுறுத்துகிறது. ‘ஆள் வேறு பேச்சு வேறு’ என்ற தலைப்பில், ஒருவர் துக்கத்தில் மற்றவருக்கு ஆதாயம் கிடைப்பதை விவரிக்கிறது. அலைபேசி படுத்தும் பாடு பற்றி விளக்குகிறது. ஓட்டு சேகரிப்பில் உள்ள நடைமுறை உண்மையை விளக்குகிறது. சிரிக்கவும், சிந்திக்கவும் கருத்துக்கள் நிரம்பிய நுால். – புலவர் ரா.நாராயணன்




