/ கதைகள் / நம்மாத்துக் கதைகள்
நம்மாத்துக் கதைகள்
பிராமண சமுதாய கலாசாரத்தை விவரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சமுதாய வாழ்வின் பண்பாடு மற்றும் சூழல் அடையாளங்களை விளக்குகிறது. குடும்பத்தில் நடக்கும் யதார்த்த நிகழ்ச்சிகளை படம் பிடிக்கிறது. விஷ்ணு சகஸ்ரநாமத்தை சரளமாக சொல்லும் வீட்டு எஜமானர், தடுமாறிய இடத்தில், அங்கு வேலை செய்யும் பெண் அடி எடுத்துக் கொடுப்பதை, ‘உரக்கச் சொல்லு’ என்ற கதை, கல்வி மனப்பழக்கம் என நினைவுபடுத்துகிறது.தாய்நாட்டை விட்டு, அயல்நாட்டிற்குச் சென்றவர்கள் குறித்து, ‘ஆழப்பதிந்த வேர்கள்’ என்ற கதை கூறுகிறது. கிராமத்தில் அக்கிரஹாரங்களும், தெருக்களும் பொலிவிழந்து காணப்படுவதை உள்ளபடி காட்டுகிறது. பிராமண சமுதாய கலாசாரம், பண்பாட்டை காக்க உதவும் நுால். – புலவர் ரா.நாராயணன்