/ கதைகள் / நான் கற்ற பாடம்!
நான் கற்ற பாடம்!
அனுபவப் பாடங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நேர்த்தியாக நெய்யத் தெரிந்த நெசவாளியின் கைவண்ணம் தெரிகிறது. மனிதநேயம் வேண்டும் என்று விரும்பும் நல்ல மனிதர் திக்குத்தெரியாமல் தவித்தவனுக்கு செய்த உதவியை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. ஜாதி, மதம் கடந்த மனங்கள் நாட்டில் இருக்கின்றன என்பதை காட்டுகிறது. மூன்றாம் பாலினத்தவர் ஏக்கம், அவலங்களை, ‘ரயில் பயணம்’ கதை விவரிக்கிறது. அது மனதுக்குள் நெருடலை உண்டாக்குகிறது. ரயில் பயணத்தில் நிகழ்கிற சம்பவங்களில் ஒவ்வொருவரும் எப்போதாவது சந்தித்து இருக்கக்கூடும். பச்சை, மஞ்சள், சிவப்பு என, வண்ணங்களை மாற்றிக் காட்டும் போக்குவரத்து விளக்கு பற்றிய கதை வித்தியாசமாக உள்ளது. – சீத்தலைச்சாத்தன்




