/ பொது / நன்மை தரும் நவ கோள்கள்

₹ 200

வா ழ்வில் சாதிக்க வேண்டியதை மகான் வேதாத்திரி வழியில் சொல்லும் நுால். மனித வேறுபாடு, கர்ம யோகம், பேய் பிசாசு, மறுபிறவி, பூர்வ ஜென்மம், புனர் ஜென்மம், சொர்க்கம், நரகம், ஆசை குறைப்பு, சினம் வெல்லல், கவலை நீக்கல், வாழ்த்துவோம் வளர்வோம் போன்ற தலைப்புகளில் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. கோள்களுக்கு துன்பம் தரும் தன்மை இல்லை என அறிவு பூர்வமாக விளக்குகிறது. மண்ணில் விதைத்தால் வளர சூரிய ஒளி தேவை; பெண்ணில் கரு உதித்தால் வளர்ச்சிக்கு அலைவீச்சு தேவை என்கிறது. சூரியக் குடும்ப கோள்களின் தன்மைகளும், நட்சத்திரத் தொகுதி அலைகளும், பூமியின் காந்தக் களத்தோடு இணைந்து ஜீவன் உருவாவதாக உரைக்கிறது. நவ கோள்கள் தரும் நன்மைகளை கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


முக்கிய வீடியோ