/ கதைகள் / நன்னெறிக் கதைகள்

₹ 79

சிறுவர்களுக்கு புரியும் வகையில் புராண பாத்திரங்களை வடிவமைத்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘மயக்குறு மங்கை மயக்கம் தரும் இதை விட வேறென்ன உலக இன்பம் இருக்கிறது என்று நாகர் தலைவன் கேட்கும்போது இல்லறமே நல்லறம் என்றும், கொல்லாமை தான் உயர்ந்தது’ என்றும் சொல்கிறான் சாதுவன். ஆதிரை அவன் மனைவி என்று அறிகிறோம்.இரணியகசிபு, மனித மிருக பறவை விலங்கு ஆகியவற்றால், வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்று வரம் வாங்கி அட்டூழியம் செய்தவன். அதனால் துாணில் பிறந்து அந்திசாயும் வேளையில் அசுரனை வென்றான் ஸ்ரீமத் நாராயணன். தீயதை அழிக்க வேண்டும் என்ற கருத்தை இளைய மனங்களில் புகுத்தும். நன்நெறி கதைகளின் திரட்டு நுால்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை