/ பயண கட்டுரை / நற்றமிழ் ஓங்கு நடைப்பயணம்
நற்றமிழ் ஓங்கு நடைப்பயணம்
தமிழுக்கு முதன்மை வேண்டும் என்ற நோக்கத்தில், நடை பயணம் செய்த அனுபவத்தை உரைக்கும் நுால். ஒவ்வொரு நாளும் மேற்கொண்ட நடை பயணம், தங்கிய இடம், உணவு, நடந்த நிகழ்ச்சிகள் நிரல்படக் கூறப்பட்டுள்ளன. ‘சோர்வும், அசதியும் தொண்டருக்கு இல்லை’ என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிக்கிறது. போராட்டம் ஒன்றே தாய்மொழியை காக்கும் என முழக்கமிடுகிறது.நடை பயண திட்டம், ஒத்துழைப்பு குழு, ஆதரவாளர்குழு என்று நீண்ட பெயர் பட்டியலை தருகிறது. பயணத்தில் ஆங்காங்கே சொற்பொழிவு, பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற செயல்பாடுகளை தெரிவிக்கிறது. சாதிக்க துணிந்து நடை பயணம் மேற்கொள்வோருக்கு வழிகாட்டியாக விளங்கும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்