/ கட்டுரைகள் / நாட்டை உலுக்கிய ஊழல்கள்
நாட்டை உலுக்கிய ஊழல்கள்
சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு பின், ஒவ்வொரு ஆட்சியிலும், குறைந்தது ஒரு ஊழலாவது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. போபர்ஸ் பீரங்கி, கால்நடை தீவனம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டையே உலுக்கிய முக்கியமான ஊழல்களின் விபரத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் ஆசிரியர் தந்துள்ளார். ஊழலுக்கு ஆட்சியும் அதிகாரமுமே அடித்தளம் என ஆசிரியர் கூறியுள்ளது, நுாற்றுக்கு நுாறு உண்மை.