/ கதைகள் / நாவல் வடிவில் குண்டலகேசி
நாவல் வடிவில் குண்டலகேசி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி மையக் கருத்தில் புனையப்பட்ட நாவல் நுால். குண்டலகேசி, காளன், ஏனாதி, மும்முடி நாய்கன், வித்தகன் போன்ற கதாபாத்திரங்கள் துணையுடன் புனையப்பட்டுள்ளது. கிளைக் கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வணிகப் பெண் குண்டலகேசி, காதலித்து மணம் செய்த காளனுடன் முரண்பட்டு, சூழ்ச்சி செய்து கொல்ல முற்படும் நிகழ்வு உரையாடலாக உள்ளது. இறுதியில் குண்டலகேசி, அருள் உபதேசம் பெற்று புத்த பிக்குணியாக மாறி, பவுத்த அறங்களை போதிப்பதை எடுத்துரைக்கிறது. பாண்டியர், சோழ மன்னர்களுக்கு இடையே இருந்த பகை உணர்ச்சியுடன் பின்னிப் பிணைத்து கதையோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையிலான உரையாடல்களுடன் அமைந்துள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




