/ கட்டுரைகள் / நவீன இலக்கியங்களில் திருநங்கையர்
நவீன இலக்கியங்களில் திருநங்கையர்
திருநங்கையர் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை கூர்ந்து அணுகி சமூகப் புரிதலை உருவாக்கும் நுால். சமூகத்தில் மட்டுமன்றி குடும்பப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கப்படும் திருநங்கையர் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் சமத்துவ நோக்குடன் அலசப்பட்டுள்ளன. பிறக்கும்போது பாலினத்தை நிர்ணயிக்கும் மரபணுக்கள் பற்றிய உடலியல் தகவல்களையும் காட்டுகிறது. திருநங்கையர் வாழ்க்கையை சமூகக் கண்ணோட்டத்தோடு அணுகி, இதிகாச, காப்பிய, புராணத் தொன்மங்கள் எடுத்துக்காட்டுகளோடு ஆய்ந்து, பதிவு கருத்தியல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு