/ கதைகள் / நீ...
நீ...
காதலுக்காக நடக்கும் சூழ்ச்சியை மையமாக வைத்து படைக்கப் பட்டுள்ள நாவல். ஊட்டிக்கு தோழியருடன் சுற்றுலா செல்லும் சகுந்தலாவுக்கு உதவுகிறார் கண்ணன். நீண்ட உரையாடல் வழியாக புரிதல் ஏற்பட்டு காதல் மலர்கிறது. கண்ணனுக்கு ஆதரவு கரம் நீட்டி வேலை தருகிறார் தொழிலதிபர் ராஜேந்திரன். காதலுக்கு எதிரியாக இருக்கிறார் சகுந்தலாவின் சகோதரர் ஆனந்தன். சதியால், தன் தங்கையை ராஜேந்திரனுக்கு மணம் முடிக்கிறார். அப்போது, கண்ணனுக்கு ஒரு சத்தியம் செய்கிறார் சகுந்தலா. அது என்ன... கண்ணனை கொலை செய்ய ராஜேந்திரன் திட்டமிடுவது ஏன்... ஆனந்தன் சூழ்ச்சியால் நடப்பது என்ன... இதில் யாரெல்லாம் கெட்ட நடத்தையுள்ளவர்... சகுந்தலாவின் சத்தியம் காப்பாற்றப்பட்டதா போன்ற திருப்பங்களுடன் அமைந்துள்ள சுவாரசியமிக்க நாவல். – டி.எஸ்.ராயன்




