/ சுய முன்னேற்றம் / நெய்தல் நில மீன் வேட்டை: எதிர்ப்படு சிக்கல்களும் நேர்கொள்ளும் முறைகளும்
நெய்தல் நில மீன் வேட்டை: எதிர்ப்படு சிக்கல்களும் நேர்கொள்ளும் முறைகளும்
கடல் மீன்பிடி தொழிலில் ஏற்படும் சிக்கல்கள், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து கருத்துகளை தொகுத்து தரும் நுால். ஆய்வு களமாக, புதுச்சேரி மாநிலம் வைத்திகுப்பம் என்ற கடற்கரை கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொழில் செய்யும் மீனவர்களிடம் தகவல் சேகரித்து ஆராயப்பட்டுள்ளது. மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்கள் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் வழிமுறை குறித்த கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு அடிப்படையில் அமைந்துள்ள நுால்.– மதி