/ வாழ்க்கை வரலாறு / நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

₹ 440

தமிழ் சினிமா இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரின் சுயசரிதை நுால். சுவாரசியமிக்க சம்பவங்களால் நிரம்பியுள்ளது. பிறப்பு பற்றிய வர்ணிப்புடன் மர்மக்கதை போல் பரபரப்பாக துவங்குகிறது. கலை மீதான ஆர்வத்தை கதை வாயிலாக துவங்கியதாக குறிப்பிடுகிறது. முதல் சன்மானமாக பெற்ற, 10 ரூபாய் காசோலை பற்றி பெருமித தகவல்களை தருகிறது. பிரபல திரைப்படக் கம்பெனியில் பெற்ற வாய்ப்பு, நடிகர் – நடிகையருடன் தொடர்புகள், பணியாற்றிய அனுபவங்கள் என சுவைமிக்க நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், ஒளிப்பதிவாளர் என, திரையுலக பிரபலங்களுடன் கொண்டிருந்த உறவை நெகிழ்வுடன் தெரிவிக்கிறது. தமிழ் சினிமாவின் ஒரு காலகட்ட வரலாற்றை விவரிக்கும் சுயசரிதை நுால். – ஒளி


முக்கிய வீடியோ