/ மாணவருக்காக / நெஞ்சில் நிலைத்த நீதிகள்

₹ 110

பள்ளியில் மாணவ – மாணவியர் நடிக்க ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள ஆறு நாடகங்களின் தொகுப்பு நுால். புராணம், இதிகாசம், புத்தர் வரலாறு, சங்க கால வரலாறு போன்ற பொருள்களைக் கொண்டவை. நாடகங்கள் அனைத்தும் படிப்பதற்கும், நடிப்பதற்கும் ஏற்றவாறு உள்ளன. துருவன் வரலாறு, குகன் வரலாறு, ஏகலைவன் வரலாறு, தேவதத்தன் வரலாறு, கோவூர் கிழார், சோழர் வரலாறு என ஆறு கதைகளை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளன. இந்த நாடகங்களை அரங்கேற்ற வசதியான குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், சிறுவர் நாடகம் எழுதுவோர், நீதிக் கதைகள் விரும்புவோரை கவரும்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை