/ அரசியல் / நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்
பக்கம்: 294, இந்திரா பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி கால நிகழ்வுகளை, ஒரு இந்துத்வ கண்ணோட்டத்தில் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். அரசியல் ரீதியாக ஜனநாயக வாதிகளால் நெருக்கடி நிலையை விமர்சித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான கோணத்தில் நிகழ்வுகளை பதிவு செய்துள்ள நூலாசிரியர், ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் அனுபவித்த இன்னல்களை பற்றி எழுதியுள்ளார். ஆனால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளரின் பார்வையில் பதிவாகியுள்ள விஷயங்களில், தமிழகத்தை சேர்ந்த மிசா கைதிகள் பற்றிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால்,அன்று முன்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.,தலைவர்கள் பற்றி தகவல்கள் காணோம்.