/ கதைகள் / நேற்றைய நிஜம்
நேற்றைய நிஜம்
கல்லுாரி காதலை மையமாக வைத்து புனையப்பட்ட குறுநாவல் நுால். கற்பனை நயத்துடன் உணர்ச்சிகள் ததும்பும் வகையில் சுவையுடன் கதை சொல்லப்பட்டுள்ளது. நோய்களுக்கு இலக்கான பெண், செல்வந்தர் குடும்பத்தில் கார், பங்களா வசதியுடன் வாழ்கிறாள். தியாகு என்பவன் அவளை மனதார காதலிக்கிறான். பெண்ணின் தந்தை பூபதியுடன், தியாகு நடத்தும் உரையாடலுடன் துவங்குகிறது கதை. காதலில் உண்மை உள்ளதா என அறியும் நோக்கத்தோடு உரையாடல் நிகழ்கிறது. இந்த பின்னணியில் கல்லுாரி காட்சிகளுடன், பணம் படுத்தும் பாட்டையும் முன்வைத்து விவரிக்கிறது. எளிய நடை, யதார்த்த உரையாடல், அடுத்து என்ன நிகழுமோ என்ற திருப்பங்களுடன் உள்ளது. குடும்பத்தின் நிகழ்வுகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல் நுால். – புலவர் ரா.நாராயணன்




