/ கதைகள் / நெவர் எண்டிங் எண்ட் (ஆங்கிலம்)
நெவர் எண்டிங் எண்ட் (ஆங்கிலம்)
துணிவும், தன்னம்பிக்கையும், அறியும் ஆவலும், சாகசம் செய்யத் துடிக்கும் சிறுமியை மையமாக வைத்து படைக்கப்பட்ட நாவல் நுால். அமெரிக்கா, டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து கனடா நோக்கி தன்னந்தனியே மிதிவண்டியில் பயணித்து அடர்ந்த காட்டை அடைகிறாள் கதாநாயகி. மரம், செடி, கொடி மண்டிய புதர், வண்ண பூக்கள், சிறகடிக்கும் பட்டாம் பூச்சி, அச்சம் கூட்டும் விலங்கினங்கள், விந்தை மனிதர்களை கண்டு ரசிக்கிறாள். அப்போது ஏற்பட்ட உணர்வுகள், எதிர்கொண்ட இன்னல்கள், பரிவு காட்டிய மனிதர்கள் என அனுபவச்சாற்றைப் பிழிந்து தந்திருக்கிறது. இயற்கையைச் சார்ந்த வாழ்க்கையை படம் பிடிக்கிறது. எளிய நடையில் சிறியோரை மட்டுமின்றி அனைவரையும் ஈர்க்கும் நுால். –- புலவர் சு.மதியழகன்




