/ மருத்துவம் / புற்றுநோய் பற்றிய புதிய தகவல்கள்!
புற்றுநோய் பற்றிய புதிய தகவல்கள்!
பு ற்றுநோயை தவிர்க்கும் வழிமுறைகளை உரைக்கும் நுால். பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருவதாக அமைந்துள்ளது. விலங்குகளுக்கும் புற்றுநோய் வரும் என்கிறது. பரம்பரை நோயாக இருப்பதையும் விளக்குகிறது. பொதுவான ஆரம்ப அறிகுறிகளை பட்டியலிட்டு காட்டுகிறது. வரும் முன் காக்கும் வழிகளை உரைக்கிறது. மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான காரணங்களை அலசுகிறது. குறிப்பாக, 55 வயதை கடந்தும் மாதவிடாய் தொடரும் பெண்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறது. விதையில் புற்றுநோயால் ஆண்மை இழப்பு பாதிப்பு ஏற்படும். அதனால் கவனமாக செயல்பட எச்சரிக்கிறது. வெற்றிலை, பாக்கு பழக்கத்துக்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கும் சம்பந்தமில்லை என கூறும் நுால். – சீத்தலைச்சாத்தன்