/ கட்டுரைகள் / நில், கவனி, யோசி, செயல்படு...
நில், கவனி, யோசி, செயல்படு...
நாட்டு நடப்புகள், மூடநம்பிக்கைகள் என, இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கிய நுால். மொத்தம், 117 தலைப்புகளில், சுவாரசியத்துடன் படைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழக கல்விச்சூழல் எப்படி இருந்தது, அதிக பாலியல் குற்றங்கள் கொண்ட நாடுகள் எது, வயோதிகத்தில் வரவேண்டிய நோய் ஏன் இளமையில் வருகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது.சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. இணைய போதையின் பாதிப்பை எடுத்துரைக்கிறது. தவிர்க்க வேண்டிய ஆடம்பரம், பெண்களின் நிலையை பேசுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் நுால்.– டி.எஸ்.ராயன்