/ கட்டுரைகள் / நிலம்–நீர்–காற்று–வனம்

₹ 200

பேராசை கொண்டு சுற்றுச்சூழலை அழித்து வருவதையும், அதை தடுத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நுால். சுற்றுச்சூழல் அழிவது பற்றியும், அவற்றை பாதுகாப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. முதலில், ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. சுரங்கங்கள் வாயிலாக கனிம வளங்களை எடுப்பது பற்றியும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இயற்கையை அழிப்பது, சேமிப்புக் கணக்கிலிருக்கும் பணத்தை முழுவதுமாக எடுத்து செலவழிப்பது போன்றது என உதாரணம் காட்டப்பட்டுள்ளது. காற்று மாசுபட்டு, மனிதன் சுவாசிக்க முடியாமல் அவதிப்படவேண்டியதையும் சுட்டிக்காட்டுகிறது. வனங்களையும், வன விலங்குகளையும் காப்பாற்ற வேண்டியதின் அவசியம் பற்றியும் தெளிவாக கூறியுள்ளது. இவற்றுடன் மணல் கொள்ளை, நதி நீர் மாசுபாடு ஆகியவை பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் நுால்.– முகில் குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை